/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உணவுப்பொருட்கள் வாங்குவதில்நுகர்வோர் கவனமாக இருக்க அறிவுரை
/
உணவுப்பொருட்கள் வாங்குவதில்நுகர்வோர் கவனமாக இருக்க அறிவுரை
உணவுப்பொருட்கள் வாங்குவதில்நுகர்வோர் கவனமாக இருக்க அறிவுரை
உணவுப்பொருட்கள் வாங்குவதில்நுகர்வோர் கவனமாக இருக்க அறிவுரை
ADDED : மார் 15, 2025 02:26 AM
உணவுப்பொருட்கள் வாங்குவதில்நுகர்வோர் கவனமாக இருக்க அறிவுரை
சேலம்:சேலம், ஜெய்ராம் கல்லுாரியில் உலக நுகர்வோர் தின விழா நேற்று நடந்தது. கல்லுாரியுடன் இணைந்து, சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் நடத்திய விழாவுக்கு, கல்லுாரி தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். முதல்வர்
பழனிசாமி வரவேற்றார். உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் பேசியதாவது: நுகர்வோர், கடைகளில் வாங்கும் உணவுப்பொருள், பாக்கெட் உணவுகளை கவனமாக பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் தயாரிப்பு நாள், காலாவதி தேதி, பேட்ச் நெம்பர், தயாரிப்பாளர் முகவரி, உணவு பொருளின் விபரம் உள்ளிட்ட முழு தகவல் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். 'ஜங்புட்' உணவை தவிர்க்க வேண்டும். உணவு பொருட்களின் தரம், கலப்படம், காலாவதி உள்ளிட்ட புகார்களுக்கு, 94440 - 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பிரபாகரன், கல்லுாரி தாளாளர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முருகேசன், சங்கர், மாணவ,
மாணவியர் பங்கேற்றனர்.