/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மதிப்பு கூட்டிய உணவுதயாரிப்பு செயல் விளக்கம்
/
மதிப்பு கூட்டிய உணவுதயாரிப்பு செயல் விளக்கம்
ADDED : மார் 15, 2025 02:46 AM
மதிப்பு கூட்டிய உணவுதயாரிப்பு செயல் விளக்கம்
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி வேளாண் துறை, அட்மா திட்டத்தில், 50 விவசாயிகள், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள விவசாயிகள் நடத்தும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு நேற்று அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு, சிறுதானியம், பாரம்பரிய அரிசி ரகங்களை மதிப்பு கூட்டல் செய்து, பல்வேறு வகை உணவு பொருட்கள் தயாரிக்கும் முறை, மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி குறித்து பார்வையிட்டனர். அங்குள்ள விவசாயிகள், மதிப்பு கூட்டல் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். பனமரத்துப்பட்டி அட்மா குழு தலைவர் சந்திரசேகரன், வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா உடனிருந்தனர்.