தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிகளில்மின்தடை இருக்கக்கூடாது: கலெக்டர்

குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிகளில்மின்தடை இருக்கக்கூடாது: கலெக்டர்

குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிகளில்மின்தடை இருக்கக்கூடாது: கலெக்டர்


ADDED : மார் 18, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடிநீர் திட்டம் செயல்படும் பகுதிகளில்மின்தடை இருக்கக்கூடாது: கலெக்டர்

சேலம்:சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து, அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:

கோடைகாலத்தில் சீரான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த, திங்கள்தோறும் அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும், 11 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம், 4 நகராட்சி, 29 டவுன் பஞ்சாயத்து, 4,466 ஊரக குடியிருப்பு பகுதிகள் பயன்பெற, தினமும், 193 எம்.எல்.டி., குடிநீர் வழங்கப்படுகிறது. சீராக குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில், எந்த மின்தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை மின்வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us