/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிறந்தநாளில் கோவிலுக்கு சென்றுவீட்டுக்கு வந்து துாங்கியவர் பலி
/
பிறந்தநாளில் கோவிலுக்கு சென்றுவீட்டுக்கு வந்து துாங்கியவர் பலி
பிறந்தநாளில் கோவிலுக்கு சென்றுவீட்டுக்கு வந்து துாங்கியவர் பலி
பிறந்தநாளில் கோவிலுக்கு சென்றுவீட்டுக்கு வந்து துாங்கியவர் பலி
ADDED : மார் 20, 2025 01:18 AM
பிறந்தநாளில் கோவிலுக்கு சென்றுவீட்டுக்கு வந்து துாங்கியவர் பலி
காரிப்பட்டி:சேலம், அயோத்தியாப்பட்டணம் கே.எம்.நகரை சேர்ந்த, சீனிவாசன் மகள் கனிமொழி, 21. இவருக்கும், கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த மனோஜ்பிரபு, 32, என்பவருக்கும், இரு ஆண்டுக்கு முன் திருமணமானது. தம்பதி இடையே தகராறால் கனிமொழி, அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் என்பதால், ஏத்தாப்பூர் முருகன் கோவிலுக்கு சென்றார். பின் வீட்டுக்கு வந்து துாங்கியுள்ளார். பெற்றோர் எழுப்பியபோது, மயங்கிய நிலையில் இருந்தார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மேல் சிகிச்சைக்கு, சேலம், அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். திருமணமான, 2 ஆண்டில் பெண் இறந்ததால், உதவி கலெக்டர் விசாரிக்கிறார்.