/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., கூட்டத்தில் சேலை வாங்கபெண்கள் இடையே தள்ளுமுள்ளு
/
தி.மு.க., கூட்டத்தில் சேலை வாங்கபெண்கள் இடையே தள்ளுமுள்ளு
தி.மு.க., கூட்டத்தில் சேலை வாங்கபெண்கள் இடையே தள்ளுமுள்ளு
தி.மு.க., கூட்டத்தில் சேலை வாங்கபெண்கள் இடையே தள்ளுமுள்ளு
ADDED : மார் 21, 2025 01:47 AM
தி.மு.க., கூட்டத்தில் சேலை வாங்கபெண்கள் இடையே தள்ளுமுள்ளு
ஏற்காடு:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, ஏற்காடு காந்தி பூங்கா அருகே நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில் பெண்களுக்கு சேலை தருவதாக கூறி, மலைக்கிராமங்களை சேர்ந்த, 500 பெண்களுக்கு, 'டோக்கன்' கொடுத்து வரவழைத்திருந்தனர்.
கூட்டம் முடிந்ததும், 'டோக்கன்'களை திரும்ப பெற்று, கட்சியினர் புடவை வழங்கினர். பெண்கள் பலர் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட பெண்கள் மீதி இருந்த நிலையில் புடவைகள் முடிந்ததால் அவர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. சில பெண்கள் கட்சியினரிடம் வாக்குவாதம் செய்தனர். பின் ஏற்பாட்டாளர்கள், அரை மணி நேரத்துக்கு பின் புடவைகளை கொண்டு வந்து வழங்கினர். இருப்பினும், 'டோக்கன்' வைத்திருந்த பலர், புடவை தீர்ந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.