தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏற்காட்டில் மீண்டும் காபி வாரியம்பழங்குடி விவசாயிகள் வலியுறுத்தல்

ஏற்காட்டில் மீண்டும் காபி வாரியம்பழங்குடி விவசாயிகள் வலியுறுத்தல்

ஏற்காட்டில் மீண்டும் காபி வாரியம்பழங்குடி விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஏப் 02, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்காட்டில் மீண்டும் காபி வாரியம்பழங்குடி விவசாயிகள் வலியுறுத்தல்

மேட்டூர்,:தமிழக மலைவாழ் பழங்குடியினர், இயற்கை விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் மதுார் ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று முன்தினம், மேட்டூர் ராஜ்யசபா எம்.பி.,யும், அகில இந்திய காபி வாரிய உறுப்பினருமான சந்திரசேகரனிடம் அளித்த மனு:

நாங்கள் ஏற்காடு வட்டத்தில், 67 கிராமங்களில் சிறு, குறு விவசாயிகள் அனைவரும் பல தலைமுறையாக காபி சாகுபடி செய்கிறோம். 70 ஆண்டுக்கு மேலாக அரசு சார்பில் அமைத்த காபி வாரியம் மூலம், நாங்கள் உற்பத்தி செய்த காபி கொட்டைகளை கொள்முதல் செய்தனர். அந்த காலகட்டத்தில் ஆண்டுக்கு, 8 முறை வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு போனஸ் வழங்கினர். 1990ல் ஏற்காடு காபி வாரியத்தை கலைத்து விட்டனர்.

தற்போது நாங்கள் உற்பத்தி செய்யும் காபி கொட்டைகளை தனியார் நிறுவனங்களிடம் விற்கிறோம். அதற்கும் உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் சிரமத்தை கருத்தில்கொண்டு ஏற்காட்டில் மீண்டும் அரசு காபி கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்

பட்டிருந்தது.இதற்கு சந்திரசேகரன் கூறுகையில், ''மனுவை காபி வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று ஏற்காட்டில் மீண்டும் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us