தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உலக வன நாளை ஒட்டிமனித சங்கிலி விழிப்புணர்வு

உலக வன நாளை ஒட்டிமனித சங்கிலி விழிப்புணர்வு

உலக வன நாளை ஒட்டிமனித சங்கிலி விழிப்புணர்வு


ADDED : ஏப் 05, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலக வன நாளை ஒட்டிமனித சங்கிலி விழிப்புணர்வு

ஏற்காடு:மார்ச், 21ல் உலக வன தினம் கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி, ஏற்காட்டில் நேற்று சேலம் மாவட்ட உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் செல்வகுமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.

முன்னதாக ஏற்காடு மலைப்பாதையில் சாலையோரம் கிடந்த குப்பையை அகற்றினர். தொடர்ந்து ஏற்காடு வந்து, வன பாதுகாப்பு குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, சந்தைப்பேட்டையில் இருந்து ஒண்டிக்கடை ரவுண்டானாவை கடந்து அண்ணா பூங்கா வரை பேரணியாக, பெரியார் பல்கலை மாணவியர் சென்றனர். அங்கு சாலையில் மனித சங்கிலி விழிப்புணர்வில்

ஈடுபட்டனர். பின் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மாணவியருக்கு, காடுகளின் முக்கியத்துவம் குறித்து வகுப்பு எடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் கீர்த்தனா(பயிற்சி), ஏற்காடு வனச்சரக அலுவலர் முருகன், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைமை அலுவலர் மாலதி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us