/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'படிக்க விரும்பும் திருநங்கையருக்குதேவையான உதவி செய்து தரப்படும்'
/
'படிக்க விரும்பும் திருநங்கையருக்குதேவையான உதவி செய்து தரப்படும்'
'படிக்க விரும்பும் திருநங்கையருக்குதேவையான உதவி செய்து தரப்படும்'
'படிக்க விரும்பும் திருநங்கையருக்குதேவையான உதவி செய்து தரப்படும்'
ADDED : ஏப் 05, 2025 01:33 AM
'படிக்க விரும்பும் திருநங்கையருக்குதேவையான உதவி செய்து தரப்படும்'
சேலம்:சேலம் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கையருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் சுய உதவிக்குழு கடன், தொகுப்பு வீடு, ரேஷன் கார்டு, மானியத்துடன் கூடிய ஆடு வளர்ப்பு கடன், கல்வி கடன் போன்ற நல உதவிகள் கேட்டு, 82 பேர் மனு அளித்தனர்.
தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட, 622 திருநங்கைகளில், 569 பேருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவருக்கு முகாம் நடத்தி விரைவில் அடையாள அட்டை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் அந்த முகாமில் ஆதார் அட்டை பெற பதிவு செய்தல், முதல்வர் காப்பீடு திட்டத்தில் இணைதல், புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பை விடுபட்ட திருநங்கையர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.