தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மீனாட்சி சொக்கநாதர் கோவில் கட்டுமான கால்கோள் விழா

மீனாட்சி சொக்கநாதர் கோவில் கட்டுமான கால்கோள் விழா

மீனாட்சி சொக்கநாதர் கோவில் கட்டுமான கால்கோள் விழா


ADDED : ஏப் 08, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மீனாட்சி சொக்கநாதர் கோவில் கட்டுமான கால்கோள் விழா

மேட்டூர்:மேட்டூர் மீனாட்சி சொக்கநாதர், ஞானதண்டாயுதபாணி கோவில் கட்டுமான பணி துவக்குவதற்காக நேற்று கால்கோள் விழா நடந்தது.

மேட்டூர் நீதிமன்ற வளாகம் அருகே, 70 ஆண்டு பழமையான மீனாட்சி சொக்கநாதர், ஞானதண்டாயுதபாணி கோவில் இருந்தது. கோவில் நிலத்தில் இருந்த நந்தவனம் உள்ளிட்ட நிலங்கள் காலப்போக்கில் ஆக்கிரமித்து

கட்டடங்கள் கட்டப்பட்டன. பின் ஆக்கிரமிப்புகள் இரு மாதத்துக்கு முன் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டு, கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதனால், 60 சென்ட் நிலத்தில் கோவில் கட்ட அரசு, 2.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

மேட்டூர் பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம் நேற்று காலை, 10:15 மணிக்கு பாலை மர கிளையை நட்டு பால் ஊற்றி கட்டுமான பணியை துவக்கி வைத்தார். அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா முன்னிலை வகித்தார்.

மேலும், செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், மண்டல துணை ஸ்தபதி மணிகண்டன், செயல் அலுவலர் மாதேஸ்வரன், தி.மு.க., மேட்டூர் நகர செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பக்தர்கள் வழங்க இருக்கும் நிதி, 5 கோடி ரூபாய் செலவில் கோவில் கோபுரம் மற்றும் கட்டு மான பணிகள் மேற்கொள்ளப்படும் என எம்.எல்.ஏ., சதாசிவம் கூறினார். கால்கோள்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us