தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போலீஸ் அனுமதி மறுப்பால் பா.ஜ., மாநாடு ஒத்திவைப்பு

போலீஸ் அனுமதி மறுப்பால் பா.ஜ., மாநாடு ஒத்திவைப்பு

போலீஸ் அனுமதி மறுப்பால் பா.ஜ., மாநாடு ஒத்திவைப்பு


ADDED : ஏப் 11, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போலீஸ் அனுமதி மறுப்பால் பா.ஜ., மாநாடு ஒத்திவைப்பு

ஓமலுார்:பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் அறிக்கை: சேலம் பெருங்கோட்டம் சார்பில், 'தேசம் காப்போம் தமிழக வெல் வோம்' மாநாடு, வரும், 19ல் ஓமலுாரில் நடக்கவிருந்தது. போலீஸ் துறை அனுமதி மறுப்பால், அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் விடுமுறையால் கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்நிலையில் மாநில தலைமை தேர்தல், தேசிய தலைமையால் அறிவிக்கப்பட்டதால், அதற்கான பணியில் மாவட்ட தலைவர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால், சேலம் பெருங்கோட்ட மாநாடு ஒத்திவைக்கப்பட்டு, ஏப்ரல் இறுதியில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாநாடு சம்பந்தப்பட்ட குழுவினர், அப்பணியை தொடர வேண்டும். மாநில தேர்தலுக்கு பின், தேசிய தலைவர்கள், மாநில தலைவர்களின் தேதி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us