/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பட்டியல் இன மக்களுக்கு அதிகளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது'
/
'பட்டியல் இன மக்களுக்கு அதிகளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது'
'பட்டியல் இன மக்களுக்கு அதிகளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது'
'பட்டியல் இன மக்களுக்கு அதிகளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது'
ADDED : ஏப் 15, 2025 02:09 AM
'பட்டியல் இன மக்களுக்கு அதிகளவில்
திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது'
ஆத்துார்:
ஆத்துாரில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடந்த சமத்துவ நாள் விழாவுக்கு, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 2,086 பயனாளிகளுக்கு, 13.03 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கி பேசியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில், எஸ்.சி., எஸ்.டி.,யை சேர்ந்த, 76 ஆயிரத்து, 929 மாணவ, மாணவியருக்கு, 6.74 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை, 13 ஆயிரத்து, 333 மாணவர்களுக்கு, 6.31 கோடி ரூபாயில், இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. பட்டியல், பழங்குடியினரை தொழில்
முனைவராக்க, இந்தியாவில் முன்னோடியாக அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.
பின், பட்டியல் இன மக்களுடன் அமைச்சர், சமபந்தி விருந்தில் பங்கேற்றார். முன்னதாக, 105 ஏக்கர் கொண்ட அய்யனார்கோவில் ஏரி வாய்க்கால் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு, வாய்க்கால் என, 31 பணிகளுக்கு, 2.20 கோடி ரூபாயில் துார் எடுக்கும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். சேலம் எம்.பி., செல்வகணபதி, டி.ஆர்.ஓ., ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவலிங்கம், சின்ன
துரை, நகராட்சி சேர்மன்கள் ஆத்துார் நிர்மலாபபிதா, நரசிங்கபுரம் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.