/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை அரசு மகளிர் பள்ளியில் 150ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
/
கோட்டை அரசு மகளிர் பள்ளியில் 150ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
கோட்டை அரசு மகளிர் பள்ளியில் 150ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
கோட்டை அரசு மகளிர் பள்ளியில் 150ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : பிப் 02, 2025 01:41 AM
கோட்டை அரசு மகளிர் பள்ளியில் 150ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
சேலம், : சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 150ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:
இப்பள்ளி, 1874ல் தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டது. தொடர்ந்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்ந்தது. இங்கிருந்து பல்வேறு துறை வல்லுனர்கள், தலைசிறந்த ஆளுமைகள் உருவாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில், 70 அரசு பள்ளிகள், நுாற்றாண்டை கடந்து செயல்படுகின்றன. இதில் முதன்மையாக, கோட்டை மகளிர் பள்ளி திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 150ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. பின் மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தீபச்சுடரை ஏற்றி, ஆண்டு விழா கல்வெட்டை, கலெக்டர் திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, முதன்மை கல்வி அலுவலர் கபீர், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.