/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட் - லாரி மோதி2 பேர் உயிரிழப்பு
/
மொபட் - லாரி மோதி2 பேர் உயிரிழப்பு
ADDED : பிப் 05, 2025 01:32 AM
மொபட் - லாரி மோதி2 பேர் உயிரிழப்பு
பனமரத்துப்பட்டி: சேலம், எருமாபாளையம், டாக்டர் நாவலர் நகரை சேர்ந்த கொத்தனார் பழனிசாமி, 41. ஓமலுார், கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி கோவிந்தராஜ், 57. நேற்று, இருவரும் டி.வி.எஸ்., மொபட்டில், நாமக்கல் பகுதியில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் பழனிசாமி ஓட்டினார்.
மாலை, 5:40 மணிக்கு, நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலை, மல்லுார் பிரிவில் வந்தபோது, முன்புறம் வந்த லாரியை, பழனிசாமி முந்த முயன்றார். அப்போது சாலை வளைவில் வந்த லாரி, மொபட் மீது மோத, இருவரும் தடுமாறி விழுந்தனர். இதில் லாரி சக்கரத்தில் சிக்கி பழனிசாமி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கோவிந்தராஜ், கவலைக்கிடமான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம், பாலக்காட்டை சேர்ந்த லாரி டிரைவர் விஜய், 29, என்பவரிடம், மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.