தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இளம்பெண் சாவில் நடவடிக்கை மந்தம்போலீசுக்கு எதிராக 2வது முறை மறியல்

இளம்பெண் சாவில் நடவடிக்கை மந்தம்போலீசுக்கு எதிராக 2வது முறை மறியல்

இளம்பெண் சாவில் நடவடிக்கை மந்தம்போலீசுக்கு எதிராக 2வது முறை மறியல்


ADDED : மார் 26, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளம்பெண் சாவில் நடவடிக்கை மந்தம்போலீசுக்கு எதிராக 2வது முறை மறியல்

சேலம்:இளம்பெண் சாவில் போலீசாரின் மந்தமான நடவடிக்கையை கண்டித்து, சேலத்தில் அவரது உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி, இ.காட்டூரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ராஜன், 30; காகாபாளையத்தை அடுத்த சேனைபாளையம், பாறைக்காட்டை சேர்ந்தவர் சுந்தரி, 28; இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, 3 வயதில் பெண் குழந்தை, 4 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த 18ல், சுந்தரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மகுடஞ்சாவடி போலீசார், சுந்தரி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சந்தேக மரணம் என வழக்குபதிந்து, கணவர் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் விசாரணை நடந்தது. திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆனதால், சங்ககிரி ஆர்.டி.ஓ., மேல் விசாரணை நடத்தினார். இரு மருத்துவர் குழு, இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்து, சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள், சேலம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு, சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறவே மறியலை கைவிட்டனர்.ஏழாவது நாளான நேற்று மதியம், சேலம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட சுந்தரி உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து தடைபட்டு பரபரப்பு உண்டானது. சுந்தரியின் சகோதரர் அய்யனார், 33, சகோதரி கீதா, 30, கூறுகையில், ''ஆர்.டி.ஓ., விசாரணை அறிக்கை, மருத்துவ பிரேத அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. போலீசாரை கேட்டால் அலைக்கழிக்கின்றனர். இதனால் தவறு செய்த குற்றவாளி வெளியே நிம்மதியாக நடமாடுகிறார். சுந்தரி சாவுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர். போலீசாரின் அறிவுரையை ஏற்று, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us