/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீ விபத்தில் ஜவுளிகள் நாசம்40 வைக்கோல் கட்டு சேதம்
/
தீ விபத்தில் ஜவுளிகள் நாசம்40 வைக்கோல் கட்டு சேதம்
தீ விபத்தில் ஜவுளிகள் நாசம்40 வைக்கோல் கட்டு சேதம்
தீ விபத்தில் ஜவுளிகள் நாசம்40 வைக்கோல் கட்டு சேதம்
ADDED : பிப் 20, 2025 01:45 AM
தீ விபத்தில் ஜவுளிகள் நாசம்40 வைக்கோல் கட்டு சேதம்
மேட்டூர்:மேட்டூர் சப் - கலெக்டர் குடியிருப்பு அருகே சாலையோரம், ஆண்டிகவுண்டர் நகர் செல்வராஜ் தற்காலிக ஜவுளி கடை வைத்துள்ளார். இரவில் துணிகளை அங்குள்ள ஒரு இரும்பு பெட்டியில் வைத்து பூட்டிச்செல்வார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, இரும்பு பெட்டியில் இருந்து புகை வந்தது. இதை அறிந்து வந்து, மேட்டூர் தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். எனினும் பெரும்பாலான துணிகள் கருகின.
அதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து, சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த நரியனுாருக்கு, டிரைவர் கவுதம், 28, என்பவர், லாரியில், 104 வைக்கோல் கட்டுகளை ஏற்றி வந்தார். நேற்று மதியம், 3:30 மணிக்கு மின் கம்பி உரசி வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் குழுவினர், வைக்கோலில் எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும், 40 வைக்கோல் கட்டுகள் கருகின.