தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி


ADDED : ஜன 29, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

ஓமலுார்,: காடையாம்பட்டி தாலுகா தீவட்டிப்பட்டி அருகே நைனாக்காட்டை சேர்ந்த, விவசாயி கவுண்டப்பன், 74. இவர், 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அந்த ஆடுகளை

பட்டியில் அடைத்துள்ளார். நேற்று காலை பார்த்தபோது, 5 செம்மறி ஆடுகள் காயம் அடைந்து இறந்து கிடந்தன. 3 ஆடுகள் பலத்த காயத்துடன் காணப்பட்டன. அவர் தகவல்படி, டேனிஷ்பேட்டை வனத்

துறையினர், சம்பவ இடத்தில் மர்ம விலங்கின் காலடி தடங்களை ஆய்வு செய்தனர்.கடந்த, 24ல், மூக்கனுார் ஊராட்சி நாதியான்காட்டு வளவில் விவசாயி சின்னத்தம்பியின், 8 செம்மறி ஆடுகளை, சிறுத்தைகள் கொன்றதாக தகவல் வெளியான நிலையில், தற்போது, 5 ஆடுகள் இறந்துள்ளன. டேனிஷ்பேட்டை வனத்துறையினர்

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us