/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி தங்கக்கட்டி கொடுத்து மோசடி 8 மாதங்களுக்கு பின் 2 பேர் மீது வழக்கு

ADDED : பிப் 02, 2025 01:37 AM
போலி தங்கக்கட்டி கொடுத்து மோசடி 8 மாதங்களுக்கு பின் 2 பேர் மீது வழக்கு
தலைவாசல், : போலி தங்கக்கட்டியை கொடுத்து, 9 பவுன் நகைகள், 1.80 லட்சம் ரூபாயை மோசடி செய்த விவகாரத்தில், 8 மாதங்களுக்கு பின், போலீசார், 2 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு, 44. ஆரத்தி அகரம் பிரிவு சாலையில், டீக்கடை வைத்துள்ளார். அங்கு, 2024 மே, 24ல், ஒரு ஆண், பெண் வந்தனர். அவர்கள், 'குடும்ப சூழலால், 'பார்' வடிவில் உள்ள அரை கிலோ தங்க கட்டியை விற்கிறோம். அதன் மதிப்பு, 6 லட்சம் ரூபாய்' என்றனர். அதற்கு சிங்காரவேலு, 'என்னிடம், 1.80 லட்சம் ரூபாய் உள்ளது. மீதி பணத்துக்கு, இரு சங்கிலிகள் கொண்ட, 9 பவுன் நகையை தருகிறேன்' என கூறி, அந்த இருவரிடம் கொடுத்து, தங்க கட்டி என கூறிய கட்டியை பெற்றுள்ளார். அவர்கள் சென்றதும், கட்டியுடன் வீடு சென்ற சிங்காரவேலு, மனைவியிடம் தெரிவித்துள்ளார். சந்தேகம் அடைந்த அவர், கட்டியை அறுத்து பார்த்தபோது பித்தளை என தெரிந்தது. அதை கொடுத்தவர்கள் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிங்காரவேலு, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 9 பவுன் நகைகள், 1.80 லட்சம் ரூபாயை மீட்டுத்தரக்கோரி, மே, 25ல், தலைவாசல் போலீசில் புகார் அளித்தார். 8 மாதங்களுக்கு பின், நேற்று, இருவர் மீது மோசடி வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'புகார் தொடர்பாக, சி.எஸ்.ஆர்., வழங்கப்பட்டது. தற்போது வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடுகிறோம்' என்றனர்.