/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிர்வாகிகள் விரைவில் மாற்றம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆவேசம்
/
நிர்வாகிகள் விரைவில் மாற்றம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆவேசம்
நிர்வாகிகள் விரைவில் மாற்றம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆவேசம்
நிர்வாகிகள் விரைவில் மாற்றம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆவேசம்
ADDED : ஜூலை 02, 2024 06:58 AM
ஆத்துார் : ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு உட்-பட்ட, அ.தி.மு.க., ஒன்றிய, நகர செயலர்கள், நிர்வாகிகள் கூட்டம் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட குமரகுரு, மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். இத்தொகுதியில், நல்ல வேட்பாளரை இழந்துவிட்டோம். கள்ளக்குறிச்சி அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியாக இருந்தது. தோல்விக்கான காரணங்களை, ஒன்றிய, நகர செயலர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். கட்சியில் செயல்பாடு இல்லாமல் பதவி சுகம் காணும் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவர். ஒவ்-வொரு தொகுதியிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்.
ஆத்துார் நகர் பகுதியில் மட்டும், 7,000 ஓட்டுகள், தி.மு.க., கூடு-தலாக பெற்றுள்ளது. ஓட்டுப்பதிவு நாளிலும், அதற்கு முந்தைய நாளிலும் சிலரின் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நடுநிலை வாக்காளர், பெண்கள், புதிய வாக்காளர் ஓட்டுகளை பெறுவதற்கு சிலர் முயற்சி செய்யவில்லை. கோஷ்டி அரசியல் செய்து வரும் சிலர், விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளனர். 2026 சட்ட-சபை தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் பணிகள் மேற்-கொள்ளப்படும்.
செயல்படாத நிர்வாகிகளை வைத்துக் கொண்டு தேர்தலை சந்-திக்க முடியாது. கட்சியின் அடிப்படையில் இருந்து, புதிய மாற்றம் விரைவில் இருக்கும். பொதுச் செயலர் இ.பி.எஸ்., மீண்டும் முதல்வராக கொண்டு வருவதற்கான தேர்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.