/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் பாலிகிளினிக் மருத்துவமனையின் 'தி ராவ் பெர்டிலிட்டி பவுண்டேஷன்' திறப்பு

ADDED : ஆக 31, 2024 01:30 AM
சேலம்: சேலம், ஓமலுார் பிரதான சாலையில், 64 ஆண்டாக, 'சேலம் பாலி-கிளினிக்' மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் புது அங்கமாக, 'தி ராவ் பெர்டிலிட்டி பவுண்டேசன்' எனும், அதிநவீன கருத்தரித்தல்
மையம்(ஐ.வி.எப்., சென்டர்) திறப்பு விழா நேற்று நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் சர-வணன் முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ராதிகா, அதிநவீன கருத்தரித்தல் மையத்தை திறந்து-வைத்தார். இதுகுறித்து சேலம் பாலிகிளினிக் நிர்வாக இயக்குனர் ராஷ்மி ராவ் கூறியதாவது: அதிநவீன கருத்தரித்தல் மையத்தின் சிறப்பு அம்சமாக கரு ஆய்வகம், ஐ.வி.எப்., ஆய்வகம், ஐ.வி.எப்., செயற்-பாட்டு அரங்கம் உள்ளிட்ட நவீன
வசதிகள், கருக்கட்டல் பயணம், துாண்டுதல் கட்டுப்பாடு, முட்டை மீட்டெடுப்பு, கருத்த-ரித்தல், கருப்பரிமாற்றம், தரம் வாய்ந்த ஆய்வகம், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், மருத்-துவர்
அஸ்வின் ராவ் மேற்பார்வையில், குறைந்த கட்டணத்தில் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் மருத்துவர்கள், தொழில் அதிபர்கள், கல்லுாரி பேராசிரி-யர்கள், மாணவர்கள், மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.