/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய கோடநாடு வழக்கில் தொடர்புடையவர் சிறையில் அடைப்பு
/
போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய கோடநாடு வழக்கில் தொடர்புடையவர் சிறையில் அடைப்பு
போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய கோடநாடு வழக்கில் தொடர்புடையவர் சிறையில் அடைப்பு
போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய கோடநாடு வழக்கில் தொடர்புடையவர் சிறையில் அடைப்பு
ADDED : ஆக 20, 2024 03:21 AM
சேலம்: சேலம் அருகே, எஸ்.ஐ.,யை தாக்கிய கோடநாடு வழக்கில் தொடர்புடையவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் போலீஸ் எஸ்.ஐ., அழகுதுரை மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கள் பழனிசாமி, மூர்த்தி, அரிசியப்பன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு தாரமங்கலம்-நங்கவள்ளி ரோட்டில் தனியார் பேக்கரி முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இடைப்பாடி அருகே சமுத்திரத்தை சேர்ந்த கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவராக கூறப்படும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், 47, அங்கு வந்தார். அவர் திடீரென எஸ்.ஐ., அழகுதுரையிடம், மேச்சேரியில் என் மீது பண மோசடி பொய் வழக்கு போட உடந்தையாக இருந்ததாக கூறி தகராறு செய்தார்.
இதுதொடர்பாக எஸ்.ஐ., அழகுதுரை, தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதில், 'நான் மற்றும் போலீசார் பணியில் இருந்தோம். அப்போது வந்த தனபால் என்பவர் என்னை பார்த்து, என் மீது மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் பொய் வழக்கு போட உடந்தையாக இருந்தாய் என கூறினார். பொது இடத்தில் தரக்குறைவாக பேசி சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டார். என்னுடன் இருந்த போலீசார், தனபாலுவை தடுத்த
போது, என்னை பார்த்து என்னைக்கு இருந்தாலும் உன்னை மற்றும் வழக்குப்பதிவு செய்து விசாரித்த மேச்சேரி இன்ஸ்பெக்டரை கொல்லாமல் விடமாட்டேன்' என. கூறி மிரட்டினார். எனவே தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அதன்படி தனபால் மீது, ஆபாசமாக பேசுதல், சட்டையை பிடித்து கீழே தள்ளுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய, நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின் தனபாலிடம் விசாரித்து, அவரை போலீசார் கைது செய்தனர். தனபாலை ஓமலுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். தனபால் மீது, ஏற்கனவே மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் பண மோசடி வழக்கு, நீலகிரி மாவட்டம் சூலுார் முட்டத்தில் கொடநாடு வழக்கு, ஜலகண்டாபுரத்தில் சொத்து பிரச்னையில் சகோதரரின் மனைவியை தாக்கிய வழக்குகள்
நிலுவையில் உள்ளன.

