sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதியோர் உதவித்தொகை வாங்க குவியும் மனுக்கள்

/

முதியோர் உதவித்தொகை வாங்க குவியும் மனுக்கள்

முதியோர் உதவித்தொகை வாங்க குவியும் மனுக்கள்

முதியோர் உதவித்தொகை வாங்க குவியும் மனுக்கள்


ADDED : ஜூலை 12, 2011 01:27 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக, மனு கொடுத்தவர்களே மீண்டும் மீண்டும் கொடுப்பதால், அதிகாரிகள் புலம்பலுக்கு ஆளாகியுள்ளனர். சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாரம்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு முதியோர் உதவித்தொகையை, 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதனால், கிராமப்புறங்களை சேர்ந்த ஆதரவற்ற முதியோர், தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கோரி, கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படுகிறது. அதில், பெரும்பாலும் உதவித்தொகை தொடர்பான மனுக்களே அதிகம் உள்ளன. மனு கொடுத்தவர்களே, மீண்டும் மீண்டும் மனுக்களை வந்து கொடுப்பதால், அதிகாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிபார்த்து, ஆய்வு நடத்துவதற்குள் அவர்கள் புலம்பி தவிக்கின்றனர். புரோக்கர் கூட்டம் ஒரு புறம் மனுக்களுடன் வந்து அதிகாரிகளை மொய்க்கின்றனர். கலெக்டர் மகரபூஷணம், இடைப்பாடியில் நடந்த அரசு விழாவில் உதவித்தொகை குறித்து சுட்டிக்காட்டினார். உதவித்தொகை அதிகம் கிடைக்கிறது என்ற ஆசையில், திரும்ப திரும்ப மனுக்களை வழங்குவதால், அதிகாரிகள் செய்வதறியாது உள்ளனர். மனு கொடுத்தால், எப்படியும் மூன்று, நான்கு வாரமாகும். அதற்குள், அவசரமாக மீண்டும் ஒரு மனுவை கொடுத்து விடுகின்றனர். மனுக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது, என பேசினார்.உதவித்தொகை மனுக்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதித்தால் மட்டுமே, அரசு நிதி உரியவர்களுக்கு சென்றடையும்.






      Dinamalar
      Follow us