sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கலெக்டரிடம் நேரில் முறையீடு

/

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கலெக்டரிடம் நேரில் முறையீடு

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கலெக்டரிடம் நேரில் முறையீடு

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கலெக்டரிடம் நேரில் முறையீடு


ADDED : ஜூலை 14, 2011 01:39 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர் : ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் யூனியன் மற்றும் நபார்டு சாலை திட்ட பணிகளை, கலெக்டர் மகரபூஷணம் ஆய்வு செய்தார்.

மதியம் 2.30 மணியளவில், காட்டுக்கோட்டையில் உள்ள ஆத்தூர் வனக்கோட்ட அலுவலக விருந்தினர் மாளிகையில் மதிய உணவுக்கு சென்ற போது, ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் வெங்கடாஜலம், துணை தலைவர் ஹனீபா உள்பட 25 பேர், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். ஆத்தூர், தலைவாசல் மற்றும் கெங்கவல்லி யூனியன் பகுதி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சார்பில் மனு அளித்த ஒப்பந்ததாரர்கள், 'மேம்பாடு செய்யும் சாலைகள், 10 முதல் 15 அடி அகலம் என மிகவும் குறைவாக உள்ளது. அவற்றை அகலப்படுத்தி சாலை அமைப்பதற்கு, சாலையோர நில உரிமையாளர்கள், நிலம் கொடுக்க தடை செய்கின்றனர். ஒரே சமயத்தில், 10 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் விட்டதில், எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கல் குவாரிகளில் போதுமான ஜல்லி கற்கள் கிடைப்பதில்லை. அதனால், 50 முதல் 60 கி.மீ., தூரம் சென்று ஜல்லி கற்கள் ஏற்றி வருவதால் நஷ்டம் ஏற்படுகிறது. கிராவல் மதிப்பீட்டில், ஒரு கி.மீ., தூரம் எடுப்பதாக கூறி உள்ளனர். அந்த இடத்தில் கிராவல் இல்லாததால், 30 கி.மீ., தூரம் சென்று கிராவல் எடுத்து வருகிறோம். அப்போது, 'பர்மிட் இல்லை' என, வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். சாலை திட்ட மதிப்பீடு செய்யும் போது இருந்த நிலை, டெண்டர் விட்டு வேலை செய்யும் போது இல்லை. திட்ட மதிப்பீடு மாற்றி வேலை செய்வதால் கால தாமதம் ஏற்படுகிறது. மணல் விலை மிகவும் அதிகரித்து வருவதால், மணல் குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதில்லை. செய்து முடித்த வேலைகளுக்கு உடனுக்குடன் பட்டியல் கிடைக்காததால், ஒப்பந்ததாரர்கள் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். அதனால், இக்குறைகளை நிவர்த்தி செய்து, ஒப்பந்ததாரர்களை காப்பாற்ற வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு, ''நபார்டு சாலை திட்ட பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும். திட்ட பணிகள் மேற்கொள்வதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்று கலெக்டர் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us