தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்

கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்

கும்பாபிேஷகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்


ADDED : பிப் 21, 2024 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2024 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார் : ஓமலுார், கோட்டை, சரபங்கா ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் கோவில் உள்ளது. அதன் சுற்று பிரகாரம், தரைத்தளம் ஆகியவற்றை, சரபங்கா முனிவர் அறக்கட்டளை சார்பில் புனரமைப்பு பணி நடந்தது. வரும், 22 காலை, 9:15 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.

இதனால் நேற்று காலை ஓமலுார் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலம், மேள தாளம் முழங்க, கோட்டையில் உள்ள கோவில் வரை ஊர்வலமாக சென்றது. அதில் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடங்களை சுமந்து சென்றனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் விநாயகர் பூஜை, சங்கல்பம் முதல்கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மூன்றாம் கால யாக பூஜை, சிறுவர்கள் கலைநிகழ்ச்சி, சிறப்பு பட்டிமன்றம், நாளை காலை, 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கும்பாபி ேஷகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us