தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தொழில்முனைவோராக திறமைகளை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை

தொழில்முனைவோராக திறமைகளை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை

தொழில்முனைவோராக திறமைகளை வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை


ADDED : மார் 16, 2024 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்:சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில் அமைப்பியல் துறை சார்பில், 'டெக்னோபிளேஸ் - 24' தலைப்பில், 2 நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. துறைத்தலைவர் ேஷாபா தலைமை வகித்தார்.

முதல்வர் விஜயன் தொடங்கி வைத்து பேசியதாவது: அமைப்பியல் மாணவர்களுக்கு உடனடி வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம். அத்துறை மாணவர்கள் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கான, 'ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்' போன்ற சில பாடப்பிரிவுகளையும் இணைத்து படித்தால் மேலும் அதிக வாய்ப்புகளை பெறமுடியும். மாணவர்கள், வேலை தேடுபவராக மட்டுமின்றி வேலை வழங்கக்கூடிய தொழில் முனைவோராக, திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கானஅதிநவீன லேப், சிறந்த ஆசிரியர்கள், நம் கல்லுாரியில் உள்ளனர். அதனால் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தர்மபுரி அரசு பொறியியல் கல்லுாரி அமைப்பியல் துறை தலைவர் ராஜ்குமார், திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி(கட்டடம், பராமரிப்பு), பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us