தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வயதான தம்பதியர்தற்கொலை முயற்சி

வயதான தம்பதியர்தற்கொலை முயற்சி

வயதான தம்பதியர்தற்கொலை முயற்சி


ADDED : ஜன 07, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தற்கொலை முயற்சி

சேலம்,சேலம், அம்மாபேட்டை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 70, தறித்தொழிலாளி, மனைவி உஷாராணி. இவர்களுடைய மகள் மேனகாவை, சில ஆண்டுகளுக்கு முன், ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். இருவரும் அவ்வப்போது, மகள் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், தற்போது வயது முதிர்வு காரணமாக செல்ல முடியாமல் வீட்டில் இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெற்றோரை பார்ப்பதற்காக மேனகா வந்துள்ளார்.அப்போது வீட்டில் பெற்றோர் இருவரும் மயக்க நிலையில் இருந்தனர். இது குறித்து கேட்டபோது, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று விட்டோம் என தெரிவித்தனர். பின்னர் இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அம்மா

பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், வயதாகிவிட்டதால் தங்களை கவனிக்க யாரும் இல்லாத காரணத்தால், மன வேதனையில் அதிகளவு மாத்திரைகள் உட்கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. தொடர் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us