/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல்வேறு திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கிவைப்பு
/
பல்வேறு திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கிவைப்பு
ADDED : ஜன 19, 2025 01:33 AM
சேலம்,: சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., நிதியில், மாநகராட்சியின், 6வது வார்டு லட்சுமி நகரில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால், கே.சி.சாமில் சாலையில், 17 லட்சம் ரூபாயில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், 6வது வார்டு பெரியார் நகர், 14வது வார்டு இட்டேரி சாலை, 15வது வார்டு ராம் நகர், 28வது வார்டு வண்டிப்பேட்டை, 31வது வார்டு அண்ணா நகர் ஆகிய இடங்களில் ரேஷன் கடைகள் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
கன்னங்குறிச்சி, தாமரை நகரில் ஈமச்சடங்கு மேடை, மாநகராட்சி, 7வது வார்டு எழில் நகர் பூங்காவுக்கு
சுற்றுச்சுவர், 13வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளையும், அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
மொத்தம், சேலம் வடக்கு தொகுதியில், ௨.௬௦ கோடி ரூபாயில் பல்வேறு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

