/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தர்மகர்த்தா வீட்டில்கோவில் நகைகள் திருட்டு
/
தர்மகர்த்தா வீட்டில்கோவில் நகைகள் திருட்டு
ADDED : ஜன 23, 2025 01:24 AM
தர்மகர்த்தா வீட்டில்கோவில் நகைகள் திருட்டு
இடைப்பாடி:இடைப்பாடி, வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 76. அதே பகுதி சக்திமாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார். வீடு அருகே உள்ள மளிகை கடை வைத்துள்ளார்.
நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, வீட்டில் இருந்து சுப்ரமணி, அவரது மனைவி சாந்தி ஆகியோர், அருகே உள்ள மளிகை கடையை திறந்து, அங்கிருந்தனர். 7:30க்கு வீட்டுக்கு வந்தபோது, பீரோ திறந்திருந்தது. அதில் இருந்த சங்கிலி, தாலி, குண்டுகள் என, 6 பவுன், கோவில் நகைகள், பணத்தை காணவில்லை. வீட்டு மேல் மாடியில் இருந்த, அவர்களது மகன் மோகன்ராஜிடம் கேட்டதோடு, அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுப்ரமணி புகார்படி, இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.