ADDED : ஜன 29, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் மோதி மூதாட்டி பலி
சேலம்: சேலம், சேலத்தாம்பட்டி ஹவுசிங் போர்டை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பார்வதி, 75. இவர் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, சிவதாபுரத்தில் உள்ள மண்டபம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, 'பல்சர்' பைக் மோதியதில், படுகாயம் அடைந்து, சேலம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அவர் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

