ADDED : ஜன 30, 2025 01:04 AM
சேவை மையத்தில் பணிபுரிய அழைப்பு
சேலம் : சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசர கால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, போலீஸ் உதவி, சட்ட உதவி ஆகியவற்றை வழங்க, சமூக நலன், மகளிர் உரிமை துறையில், சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம், சேலம் மற்றும் ஆத்துரில் இயங்குகிறது. இரு மையங்களில் பணிபுரிய, ஒப்பந்த அடிப்படையில், ஒரு முதன்மை ஆலோசகர், 4 வழக்கு பணியாளர், 2 பல்நோக்கு உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அப்பதவிகளுக்கு முறையே, 22,000, 18,000, 10,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், சுய விபரங்களை, பிப்., 10, மாலை, 5:00 மணிக்குள், கலெக்டர் அலுவலக வளாக அறை எண்: 126ல் உள்ள, மாவட்ட சமூக நல அலுவலகத்தில், தபால் மூலமோ, நேரிலோ ஒப்படைக்கலாம். விபரம் பெற, 0427-2413213 என்ற எண்ணில் அழைக்கலாம்.

