ADDED : ஜன 30, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பஸ் டயர்வெடித்தது
ஆத்துார்:தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து, சேலம் மாவட்டம் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் நோக்கி நேற்று இரவு, 8:00 மணிக்கு, சேலம் கோட்ட அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலை நடுவே ஊர் பெயர் வழிகாட்டி பலகை கம்பத்தின் அடிப்பகுதியில் பஸ் உரசியபடி வந்தது. இதில் பஸ்சின் முன்புற டயர் வெடித்தது. பயணியர் இறக்கி விடப்பட்டனர். பாதி தடத்தில் நின்றதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆத்துார் கிளை பணிமனை பணியாளர்கள், டயரை கழற்றிவிட்டு, வேறு டயர் மாற்றினர். பின் பஸ்சை எடுத்துச்சென்றனர்.