தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்


ADDED : ஜன 30, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

தாரமங்கலம்:தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், தைப்பூசத்தில் தேரோட்டம் தொடங்கி, 3 நாட்கள் நடக்கும். அதற்கு முன், அக்கோவிலுக்கு உட்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.

அதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மதியம், 1:30 மணிக்கு மேல், தேர் நிலையத்தில் உள்ள தேரில் எழுந்தருள செய்தனர்.

தொடர்ந்து மாலை, 3:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கரகாட்டம், பம்பை மேளம், இளைஞர்கள் கிராமிய ஆட்டம் ஆடியபடி சென்றனர். தேரை, ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேர் வீதிகளில் இழுத்துச்சென்றனர். பின் மீண்டும் தேர் நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று அம்மன் குதிரை வாகனத்தில் பாரிவேட்டை நடக்கிறது.

சன்னாசி வரத பெருமாள்ஆத்துார் அருகே தளவாய்பட்டியில், மலை அடிவாரத்தில் ஞாலகிரி சன்னாசி வரதன், வேணுகோபால் சுவாமி கோவில்கள் உள்ளன. அங்கு, சித்தராக வாழ்ந்த சன்னாசி வரதன், தை அமாவாசையில் ஜீவசமாதி அடைந்தார். இதனால் சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சன்னாசி வரதபெருமாள், வேணுகோபால் சுவாமிக்கு கோவில் அமைத்து, தை அமாவாசையில் தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு, சன்னாசி வரதன், வேணுகோபால் சுவாமியின் தேரை, விழாக்குழுவினர், ஏராளமான மக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தொடர்ந்து, கோவில் வளாகத்தை சுற்றி வலம் வந்தனர். அப்போது, சன்னாசி வரதன், வேணுகோபால், ராதா, ருக்குமணி, கிருஷ்ணன், சிங்க முக ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

இன்று தேரோட்டம்இந்து சமய அறநிலையத்துறையின், ஓமலுார் ஓங்காளியம்மன் கோவில் தைத்திருவிழாவை ஒட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. சிங்க வாகனத்தில், தேரில் எழுந்தருளிய அம்மன், கோவிலை சுற்றி வலம் வந்தார்.

இன்று மாலை மகமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. அதேபோல் காமலாபுரம் அடுத்த குப்பூர் காளியம்மன் கோவில் தைத்திருவிழாவில், இன்று மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை சத்தாபரணம், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us