ADDED : பிப் 01, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமியை சீண்டிய முதியவர் கைது
ஆத்துார்:தலைவாசல் அருகே வீரகனுார் பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம், 13 வயது சிறுமி நின்றிருந்தார். அப்போது அங்கிருந்த முதியவர், சிறுமி ஆடையை கிழித்து, பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரித்ததில், கடலுார் மாவட்டம் வேப்பூர், ஒரங்கூரை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துராஜ், 68, பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது. இதனால் 'போக்சோ' வழக்கு பதிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.