/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சந்தை நிலுவை தொகைவசூலிக்க கோரிக்கை
/
சந்தை நிலுவை தொகைவசூலிக்க கோரிக்கை
ADDED : பிப் 01, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தை நிலுவை தொகைவசூலிக்க கோரிக்கை
கெங்கவல்லி:கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம், நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி லோகாம்பாள் தலைமை வகித்தார். அதில் அ.தி.மு.க., கவுன்சிலர் இளவரசு, 'வாரச்சந்தை ஏலம் விட்டதற்கான தொகை, 4 ஆண்டுகளாக வசூல் செய்யப்படாமல் உள்ளது. உடனே வசூலிக்க வேண்டும்' என்றார். செயல் அலுவலர் ஜனார்த்தனன், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். தொடர்ந்து, 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், தெடாவூர் டவுன் பஞ்சாயத்து, கவுன்சிலர் கூட்டம், தி.மு.க., தலைவர் வேல் தலைமையில் நடந்தது. அதில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.