தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏட்டுவை தாக்கிய சகோதரர்கள் கைது

ஏட்டுவை தாக்கிய சகோதரர்கள் கைது

ஏட்டுவை தாக்கிய சகோதரர்கள் கைது


ADDED : பிப் 01, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏட்டுவை தாக்கிய சகோதரர்கள் கைது

சேலம் : சேலம், அம்மாபேட்டையில், அன்னை தெரசா அறக்கட்டளை நடத்தி, மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளாராக இருந்த செந்தில்குமாரை பிடிக்க, அவர் வசிக்கும் குறிஞ்சி நகர்,

குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், ஏட்டு குமார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் மது போதையில் தகராறில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் ஏட்டு குமார், சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரை, போதையில் இருந்தவர்கள், எட்டி உதைத்து தள்ளி விட்டதோடு, கல்லால் தாக்க முயன்றனர். அங்கிருந்தவர்கள் தடுத்ததால் ஏட்டு தப்பினார். இதுகுறித்து ஏட்டு புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, குறிஞ்சி நகரை சேர்ந்த ரவுடி சரவணன், 48, அவரது தம்பி செந்தில், 40, ஆகியோரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us