/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அண்ணாதுரை சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மரியாதை
/
அண்ணாதுரை சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மரியாதை
ADDED : பிப் 05, 2025 01:30 AM
அண்ணாதுரை சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மரியாதை
சேலம், :முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி, அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர மாவட்டம் சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அமைப்பு செயலர்கள் செம்மலை, சிங்காரம் தலைமை வகித்து, மாலை அணிவித்தனர். இதில் கொள்கை பரப்பு துணை செயலர் வெங்கடாசலம், மாநகர பொறுப்பாளர்கள் செல்வராஜ், பாலு, எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரவிச்சந்திரன், சக்திவேல், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாசலம், பகுதி செயலர்கள் மாரியப்பன், முருகன், அசோக்குமார், பிரகாஷ், குமார், உமாசங்கர், யாதவமூர்த்தி, ஜகதீஷ்குமார், சார்பணி செயலர், மகளிரணி, மாநகர இளைஞரணி நிர்வாகிகள், பாசறை தலைவர், விவசாய அணி இணை செயலர், வர்த்தக அணி இணை செயலர்கள், வார்டு செயலர்கள், தொழில்நுட்ப பிரிவு செயலர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.