/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய மருந்தாளுனர் தினம் கடைபிடிப்பு
/
தேசிய மருந்தாளுனர் தினம் கடைபிடிப்பு
ADDED : பிப் 05, 2025 01:31 AM
தேசிய மருந்தாளுனர் தினம் கடைபிடிப்பு
சேலம் : ஜனவரி மாதம், மருந்தாளர்களின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தி அவர்களை அங்கீகரிக்கும்படி, தேசிய மருந்தாளுனர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மருந்தியல் துறை மூலம், மருந்தக கண்காட்சி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, கல்லுாரி வளாகத்தில் நடத்தப்பட்டது. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தார்.
விம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவ மற்றும் முதியோர் மருத்துவ பிரிவு ஆலோசகர் பிரபாகரன், மருந்தக கண்காட்சியை பார்வையிட்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை, துறையின் மருந்தியல் பிரிவு உதவி பேராசிரியர்கள் தீபிகா, மருத்துவர் கோகுல ப்ரியா மற்றும் காயத்ரி செய்திருந்தனர்.