/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாக்குவாதம், தர்ணா கூட்டம் ஒத்திவைப்பு
/
வாக்குவாதம், தர்ணா கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 07, 2025 01:03 AM
வாக்குவாதம், தர்ணா கூட்டம் ஒத்திவைப்பு
ஓமலூர்,:காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து கூட்டம், நேற்று நடந்தது. வி.சி., கட்சியை சேர்ந்த, தலைவர் குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் திருநாவுக்கரசு, செயல் அலுவலர் பொற்கொடி முன்னிலை வகித்தனர்.
தீர்மானம் வாசிக்கப்பட்டபோது, குமார், தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் காமாட்சி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தீர்மான நோட்டில் கையெழுத்திடாமல் காமாட்சி வெளியேறினார். தொடர்ந்து, அ.தி.மு.க., கவுன்சிலர், 7 பேர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா, இல்லையா என, செயல் அலுவலரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். பின் அலுவலகம் உள்ளே தர்ணாவில் ஈடுபட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் பேச்சு நடத்தினர். இந்நிலையில் நிர்வாக காரணத்தால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட, அனைவரும் கலைந்து சென்றனர்.

