ADDED : பிப் 12, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருதய சிகிச்சை இலவச முகாம்
மேட்டூர், :-கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட், சேலம் ஸ்ரீகோகுலம் மருத்துவமனை சார்பில், மேட்டூர் வைத்தீஸ்வரா பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஆலை நிறுவன தலைவர் கஜேந்திரன் தொடங்கி வைத்தார். மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், கோகுலம் மருத்துவமனை தலைவர் அர்த்தநாரி, ஆலை துணைத்தலைவர்கள் ஸ்ரீராம்குமார், சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு மருத்துவர்கள் மோகன், ராஜேஷ், தரணீஸ்வரன், சஞ்செய், இருதய சிகிச்சை, ரத்த அழுத்தம், சர்க்கரை, எலும்பு நோய்களுக்கு, இ.சி.ஜி., எக்கோ எடுத்து, இலவசமாக சிகிச்சை அளித்தனர். சுற்றுப்பகுதியை சேர்ந்த, 550 பேருக்கு மேல் பயன்பெற்றனர். அதில், 370 பேருக்கு, இ.சி.ஜி., 120 பேருக்கு எக்கோ எடுக்கப்பட்டது.

