/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஹயக்ரீவர் லட்சார்ச்சனைபெருவிழா நாளை தொடக்கம்
/
ஹயக்ரீவர் லட்சார்ச்சனைபெருவிழா நாளை தொடக்கம்
ADDED : பிப் 18, 2025 01:36 AM
மோகனுார்:மோகனுாரில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. சக்கரத்தாழ்வார் சிறப்பு வழிபாட்டு ஸ்தலமான இங்கு, ஆண்டுதோறும், மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றியடையவும், தொழில் ஸ்தாபனங்கள் வளர்ச்சியடையவும், இயற்கை சீற்றங்கள் தனியவும், உலக நன்மைக்காகவும் லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு விழா, நாளை தொடங்கி, 23 வரை, ஐந்து நாட்கள் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு, விஸ்வக்ஷேவ பூஜை, புண்யாஹாவாசனம், 9:00 மணிக்கு, ஹயக்ரீவர் திருமஞ்சனம், மாலை, 4:30 மணிக்கு, லட்சார்ச்சனை நடக்கிறது. 23 காலை, 7:00 மணிக்கு, ஹோமசங்கல்பம், மேதா ஹயக்ரீவர், லட்சார்ச்சனை நிறைவு, சிறப்பு திருமஞ்சனம், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி, கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருச்சுற்று எழுந்தருளல், புஷ்பாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், ஆய்வாளர் லோகேஷ் செய்துள்ளனர்.

