ADDED : பிப் 23, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழுதான பணிமனையை சீரமைக்க கோரிக்கை
சேலம் :தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத்தின் வைர விழா மாநில மாநாடு சேலம், கோட்டையில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். அதில் தற்காலிக பணி விதிகளை சீரமைத்து நிரந்தர சேவை விதிகள் உருவாக்குதல்; பழுதான பணிமனைகளை சீரமைத்து தொழிலாளர் பாதுகாப்புடன் பணிபுரியும் நிலையை உருவாக்குதல்; துவக்க நிலை தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைத்தலைவர் முருகபெருமாள், வரவேற்பு குழு தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

