ADDED : பிப் 23, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேன் மோதிதொழிலாளி பலி
தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் ஏழுமலை, 30. இவரது தந்தை தங்கவேல், 58. கூலித்தொழிலாளியான இவர், வனிச்சம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல, நேற்று காலை, 11:30 மணிக்கு, பொன்னையர் வட்டத்தில் சாலையோரம் நின்றிருந்தார். அப்போது வந்த மினி சரக்கு வேன் மோதியதில், தங்கவேல் படுகாயம் அடைந்தார்.
அவரை, மக்கள் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் அவர் இறந்துவிட்டார். ஏழுமலை புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.