ADDED : மார் 02, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜகணபதி மீதுவிழுந்த சூரிய ஒளி
வீரபாண்டி:ஆட்டையாம்பட்டி, கைலாசம்பாளையம் புதுாரில் உள்ள ராஜகணபதி கோவிலில், கருவறையில் உள்ள விநாயகர் சிலை மீது சூரிய ஒளி பட்டு வழிபடும் அரிய நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது. அதன்படி நேற்று காலை, 7:15 முதல், 7:30 மணி வரை மூலவர் விநாயகர் சிலை மீது சூரிய ஒளி தென்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'இங்கு, 2016ல் ராகு, கேது, நவக்கிரக பரிவார சிலைகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதிலிருந்து பிப்ரவரி மாதத்தில், 21 முதல், 25 வரை, காலையில் சூரியஒளி, மூலவர் மீது விழும் நிகழ்வு நடக்கிறது. சில ஆண்டாக தாமதமாக நடக்கிறது. நடப்பாண்டு ஒரு வாரம் தாமதமாக நடந்துள்ளது. இந்நிகழ்வு அடுத்த சில நாட்களுக்கு நடக்கும்' என்றனர்.