ADDED : மார் 10, 2025 01:31 AM
அ நிறம் | அளவு
ஆஞ்சநேயர் சிலை திருட்டு
சேலம்சேலம், தளவாய்பட்டி சென்றாய பெருமாள் கோவில் பூசாரி சண்முகம். இவர், கடந்த, 1ல் பூஜையை முடித்துவிட்டு இரவு கோவிலை பூட்டிச்சென்றார். மறுநாள் காலை வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 1 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை திருடுபோனது தெரிந்தது. பூசாரி தகவல்படி, கோவில் செயல் அலுவலர் கோகிலா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார்
விசாரிக்கின்றனர்.
