/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., பொதுக்கூட்டம்நலத்திட்ட உதவி வழங்கல்
/
தி.மு.க., பொதுக்கூட்டம்நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 10, 2025 01:50 AM
தி.மு.க., பொதுக்கூட்டம்நலத்திட்ட உதவி வழங்கல்
ஓமலுார்:முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்டம், காடையாம்பட்டி பேரூர் சார்பில் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் அறிவழகன் தலைமை வகித்தார். அதில் கட்சியின் செய்தி தொடர்பு இணை செயலர் தமிழன் பிரசன்னா பேசினார். தொடர்ந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 500 ஏழை மக்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. பேரூர் செயலர் பிரபாகரன், காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலர் பங்கேற்றனர்.
கிரிக்கெட் போட்டி அதேபோல் அயோத்தியாப்பட்டணம் அடுத்த சுக்கம்பட்டியில், தெற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய செயலர் விஜயகுமார் தலைமையில், கிரிக்கெட் போட்டி நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தொடங்கி வைத்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே, 25,000 ரூபாய், 15,000, 10,000, 6,000 ரூபாயுடன் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் ஆறுதல் பரிசாக டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது.