/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கையர் தர்ணா
/
கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கையர் தர்ணா
ADDED : மார் 13, 2025 02:12 AM
கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கையர் தர்ணா
சேலம்:சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கையர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். பின் போலீசார் அறிவுரையை ஏற்று, தர்ணாவை கைவிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் அளித்த மனு: மதுரையை சேர்ந்த திருநங்கை ரம்யா. இவர் சேலம் கார்கானா தெருவில், அங்குள்ள திருநங்கையர் நந்தினி, பூஜாவுடன் சேர்ந்து வீடு வாங்கி
தங்கியிருந்தார். சில மாதங்களுக்கு முன் ரம்யா, மக்களிடம் பிரச்னை செய்தார். இதனால் அவரை, எங்கள் தெருவில் அனுமதிக்க மறுத்துவிட்டோம்.
ஆனால் அவர், 'இங்குதான் இருப்பேன்' என கூறி, கணவர் கார்த்திக், நண்பர்களுடன் சேர்ந்து மற்ற திருநங்கையருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மாலை, 6:00 மணிக்கு மேல், சேலம் புது பஸ் ஸ்டாண்டில், 'நான் மட்டுமே யாசகம் கேட்பேன். எனக்கு போட்டியாக யாராவது வந்தால் கொன்றுவிடுவேன்' என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் ரம்யா மீது நடவடிக்கை கோரி, நேற்று முன்தினம் இரவே, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை, திருநங்கையர் முற்றுகையிட்டனர். தொடர்ந்து நேற்று தர்ணாவில் ஈடுபட்டதும், சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.