ADDED : மார் 13, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ஜ., கையெழுத்து இயக்கம்
சேலம்:தமிழகத்தில் புது கல்வி கொள்கை, மும்மொழி கல்விக்கு ஆதரவு திரட்டும்படி, பா.ஜ., சார்பில், தமிழகம் முழுதும் கையெழுத்து இயக்கம் நடக்கிறது. சேலம் மாநகர் மாவட்டம், சூரமங்கலம் மண்டலம் சார்பில், சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மண்டல தலைவர் அருண் தலைமையில், மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதிஸ்ரீ உள்பட பலர் பங்கேற்றனர். அதில் ஏராளமானோர் கையெழுத்திட்டு, ஆதரவு தெரிவித்தனர்.