தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்கள்பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்கள்பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்கள்பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : மார் 18, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்கள்பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்களுக்கான பட்டய தேர்வுகள் வரும் மே, 23ல் துவங்கி ஜூன், 11 வரை நடக்கிறது. விண்ணப்பிக்க விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து, தேர்வர் வசிக்கும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் காமிரா மூலம் புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னரே, தேர்வு கட்டணம் செலுத்த தேர்வர் நேரில் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திற்கும், 50 ரூபாய் கட்டணமும், மதிப்பெண் சான்றிதழ் பெற, 100 ரூபாயும், பதிவு மற்றும் சேவைக்கட்டணம், 15 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம், 70 ரூபாய் செலுத்த வேண்டும். வரும், 18 முதல், 24 வரை தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில், 25 மற்றும், 26ல் சிறப்பு அனுமதி கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us