தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் சக்தி அழைத்தல்

எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் சக்தி அழைத்தல்

எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் சக்தி அழைத்தல்


ADDED : மார் 26, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் சக்தி அழைத்தல்

சேலம்:சேலம், எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில், இந்தாண்டு பங்குனி மாத திருவிழா கடந்த, 18ல் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முதல் நாளாக, சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. முன்னதாக, சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, எல்லைப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. சக்தி அழைக்கும் நிகழ்ச்சியில், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி தந்த அம்மனுக்கு, ஏராளமான பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு ஆகியவற்றை தலையில் ஏந்தியபடி, சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து, அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்.

பின்னர் பூசாரி மந்திரங்கள் ஓத, சிறப்பு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க மஹா தீபாராதனை காட்டப்பட்டது. சக்தி அழைத்தல் வைபவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து, அம்மனை வழிபட்டனர்.

இன்று அதிகாலை அம்மனுக்கு கங்கணம் கட்டுதல், அலகு குத்துதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், நாளை திருக்கல்யாணம், அக்னி குண்டம் இறங்குதல் வைபவமும், 28ல் பால்குட ஊர்வலம், 108 லிட்டர் பால் அபி ேஷகம் நடைபெறுகிறது. 29 இரவு சத்தாபரணம், 30ல் மஞ்சள் நீராட்டு விழா, 31ல் குத்து விளக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us