/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தகாத உறவுக்கு மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து
/
தகாத உறவுக்கு மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : மார் 27, 2025 01:06 AM
தகாத உறவுக்கு மறுத்த வாலிபருக்கு கத்திக்குத்து
மேட்டூர்:மேட்டூர், திலகர் நகரை சேர்ந்தவர் தங்கவேல், 70. மேட்டூர் தாலுகா அலுவலக பின்புறம் பகுதியை சேர்ந்தவர் புருேஷாத்தமன், 28. மேட்டூர் தினசரி சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளார். இவர் வியாபாரம் தொடர்பாக, தங்கவேலிடம் பணம் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவரும் சந்தித்து வந்த நிலையில், தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
நேற்று மதியம், 2:30 மணிக்கு புருேஷாத்தமன், தங்கவேல் வீட்டில் இருந்தார். அப்போது, 'தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். சிகிச்சை முடிய ஒரு மாதம் ஆகும்' என புருேஷாத்தமன் கூறியுள்ளார். அதற்கு தங்கவேல், 'ஒரு மாதம் பிரிந்து இருப்பது கடினம்' என கூற, வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தங்கவேல், கத்தியால் புரு ேஷாத்தமன் வயிற்றில் குத்தியுள்ளார். அவர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேநேரம் தாக்குதலில் காயம் அடைந்த தங்கவேலுவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.