/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன்
/
வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன்
ADDED : மார் 27, 2025 01:07 AM
வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன்
வாழப்பாடி:வாழப்பாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துசாமி, 43. இவரது, 'ஸ்பிளண்டர்' பைக், அவரது வீடு முன், கடந்த, 17 இரவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திருடுபோனது. அதேபோல் வாழப்பாடி, அய்யாகவுண்டர் தெரு பிரவீன், 27, என்பவரது, 'அப்பாச்சி ஆர்டிஆர்' பைக், கடந்த, 23 இரவு திருடுபோனது. வாழப்பாடி போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் விசாரித்தனர்.
இந்நிலையில் புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, வாழப்பாடி போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'அப்பாச்சி' பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்தபோது, திருட்டு பைக்கு என்பதும், பெத்தநாயக்கன்பாளையம், ஆரியூர் தெருவை சேர்ந்த சசிகுமார், 24, என்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சசிகுமார் மீது பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. பல்வேறு இடங்களில் திருடிய பைக்குகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.
வாழப்பாடியில் திருடுபோன இரு பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன' என்றனர்.
***********